பதிவு செய்த நாள்
30
ஜன
2012
12:01
தர்மபுரி: தர்மபுரி பாரதி நகர் மின் நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் வளாதக்தில் ஸ்ரீமாதா ஜகத்ஜனனி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. அன்னை ஸ்ரீஜகத்ஜனனி கோவில் இமயமலையில் மட்டுமே இருந்தது. இரண்டாவதாக ஆந்திரா மாநிலம் நந்தியால் நகரத்தில் 1999ம்ஆண்டு கோவில் கட்டப்பட்டது. மூன்றாவதாக தர்மபுரி மின் நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அன்னை ஸ்ரீஜகத்ஜனனி தனக்கு பிரியமான சிங்கத்தை வாகனமாகவும், 17 தலை ஆதிசேசன் குடைபிடிக்க பத்மாசனத்தில் எட்டு கரங்களில் சந்திர மண்டலம், பூமண்டலம், சூர்ய மண்டலத்தில் சதுர்புஜ மஹா லட்சுமி. அபயகரத்தில் மூன்றவாது நேத்ரம், சூலம், சங்கு, உடுக்கை, வில், சதுர்முக பிரம்மாவை தாங்கியும், வயிற்சில் பஞ்சமுக சிவனுடன், பாதத்தின் கீழ் ஸ்ரீசக்கரம் தாங்கி சயன கோலத்தில் மஹா விஸ்ணுவுடன், ஜ்வாலா கிரீடம் தரித்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.மஹா கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 27ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, சப்தநதி தீர்த்த கலச ஊர்வலம், முதற்கால யாகபூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை நடந்தது.கடந்த 28ம் தேதி இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, மாலையில் மூன்றாவது கால யாக பூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, காலை 9 மணிக்கு மஹா கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.கும்பாபிஷேகத்தை பாலசுப்பிரமணி சிவாச்சாரியார் முன்னின்று நடத்தினார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.