நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் தன் மகனை அழைத்து வந்தார். “ஐயா... இந்தப் பையன் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான். இப்படி சாப்பிட்டால் உடல்நிலை கெடும் என புத்திமதி சொல்லுங்கள்” என வேண்டினார். “தாங்கள் இப்போது இவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். மூன்று நாள் கழித்து வாருங்கள்” என்று அனுப்பினார். மூன்று நாள் கழித்து மகனுடன் வந்தார் அந்தப் பெண். நாயகம் அவனிடம் “தம்பி இனிப்பை அதிகம் சாப்பிடாதே. உடல்நிலை கெட்டுவிடும்” என்றார். இதைப்பார்த்த அந்த பெண்ணுக்கு குழப்பம் வரவே “இதை நீங்கள் அன்றே அவனிடம் சொல்லியிருக்கலாமே... தேவையில்லாமல் இன்று ஏன் அலைய வைத்தீர்கள்” சாந்தமுடன் “அம்மா கேட்பது சரிதான். ஆனால் அன்று அவனுக்கு புத்திமதி சொல்லும் தகுதி இல்லாமல் இருந்தேன். எனக்கும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது. மூன்று நாளாக கஷ்டப்பட்டு முயன்று கைவிட்டிருக்கிறேன். அதனால் தான் அன்று சொல்லவில்லை” என்றார்.