பதிவு செய்த நாள்
11
ஆக
2018
06:08
* ஆகஸ்ட் 11 ஆடி 26: ஆடி அமாவாசை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக்கோல காட்சி, திருநெல்வேலி மாவட்டம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் உற்ஸவம், திருச்செந்தூர் முருகன் தீர்த்தாபிஷேகம், மதுரை கள்ளழகர் கருட சேவை, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருவிழா.
* ஆகஸ்ட் 12 ஆடி 27: சந்திர தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, நயினார்கோவில் சவுந்திரநாயகி, திருவாடானை சினேகவல்லி தேர், நாகப்பட்டினம் நீலாயதாட்சி கண்ணாடிப் பல்லக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பூப்பல்லக்கு.
* ஆகஸ்ட் 13 ஆடி 28: ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர், கந்தாடை தோழப்பர் திருநட்சத்திரம், பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள் குருபூஜை, செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம், திருச்செந்துார் முருகன் கோயிலில் பார்வதியம்மன் ஊஞ்சல்.
* ஆகஸ்ட் 14 ஆடி 29: நாக சதுர்த்தி விரதம், தூர்வா கணபதி விரதம், சதுர்த்தி விரதம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திருவாடானை சினேகவல்லி, நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக்காட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வெட்டிவேர் சப்பரம்.
* ஆகஸ்ட் 15 ஆடி 30: கருடபஞ்சமி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி–பர்வதவர்த்தினி, திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் – சினேகவல்லி திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கருங்குருவிக்கு உபதேசித்த லீலை, பத்ரிநாராயணர் திருநட்சத் திரம், நயினார்கோவில் சவுந்திரநாயகி திருமணக்கோல பவனி.
* ஆகஸ்ட் 16 ஆடி 31: சஷ்டி விரதம், பெருமிழலைக் குரும்பர் குருபூஜை, திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ஆவணித்திருவிழா ஆரம்பம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.
* ஆகஸ்ட் 17 ஆவணி 1: விஷ்ணுபதி புண்ணியகாலம், மதுரை மீனாட்சி கைலாய காமதேனு வாகனம், மாணிக்கம் விற்ற லீலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருநட்சத்திரம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை, திருத்தணி முருகன் கிளி வாகனம், திருவள்ளூர் வீரராகவரர் பவனி.