* விழிப்புடன் இருப்பவரின் வீட்டில் திருட்டு நடக்காது. அது போல விழிப்புடன் இருக்கும் மனதில் தீய எண்ணம் நுழையாது. * எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுவே சிக்கலுக்கு எல்லாம் காரணம். * சூரிய உதயத்திற்கு முன்பு வெண்ணெய் கடைவது போல இளமைக்காலமே ஆன்மிகத் தேடலுக்கு ஏற்றது. * உலக ஆசைகளில் நடுவில் இருந்து கொண்டே மனதை அடக்கி ஆள்பவனே உண்மை வீரன். * பெண்களை உன் தாயாக கருது. அவர்களின் முகத்தைப் பார்க்காதே; பாதங்களை மட்டும் பார். பாவ எண்ணம் தோன்றாது. மற்றவர் குறைகளை பற்றி பேச விரும்புபவன், விலைமதிப்பற்ற காலத்தை வீணாக்குகிறான். * கடவுளை வெளியில் தேடுவது அறியாமை. உனக்குள்ளே அவர் இருப்பதை உணர்வதே ஞானம். * உன்னுடைய மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள். அதற்காக மற்றவர் மீது வெறுப்பு கொள்ளாதே. * பாம்பும் அதன் மேல்சட்டையும் வெவ்வேறானவை. அது போல ஆன்மாவும், உடலும் வெவ்வேறானவை. * பழங்கள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். நீ பெருமை அடைய விரும்பினால் அடக்கத்தோடும், பணிவோடும் இரு. – எச்சரிக்கிறார் குருதேவர்