பதிவு செய்த நாள்
13
ஆக
2018
12:08
வில்லியனுார்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவை முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி,விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை 7;00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
முக்கிய விழாவான தேர்த்திருவிழா நேற்று காலை 8:30 மணிக்கு நடந்தது. ஆடிப்பூர தேரோட்டத்தை, சுகுமாறன் எம்.எல்.ஏ., தலைமையில், முதல்வர் நாராயணசாமி வடம்பிடித்து துவக்கி வைத்தார். இந்து அறநிலைத் துறை ஆணையர் தில்லைவேல், என்.ஆர்., காங்., செல்வம், நடராஜன், காங்., பிரமுகர்கள் கண்ணபிரான், செந்தில்குமரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.