பதிவு செய்த நாள்
13
ஆக
2018
12:08
கடலுார்: கடலுார் நாகம்மன் கோவில் செடல் பெருவிழாவின் 4ம் நாள் உற்சவத்தில் ஓட்டல் ஆனந்தபவன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவில் செடல் பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தீபாராதனைகள், அம்மன் வீதியுலா, சொற்பொழிவு நடந்து வருகிறது. 4ம் நாள் உற்சவமான நேற்று காலை கடலுார் ஓட்டல் ஆனந்தபவன் சார்பில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் ஓட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் ராம்கி நாராயணன், அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டல் ஆனந்தபவன் உரிமையாளர்கள் நாராயணன், உமா சங்கரி நாராயணன், சிம்யா ராம்கி, ராது மற்றும் வெங்கடசுப்பு, விஜயலட்சுமி வெங்கடசுப்பு, ராம் நம்பேஷ், பிரசாத், ரூபினி, ஓட்டல் வசந்தபவன் சங்கரன், ஜி.ஆர்.ஓட்டல் ரங்கராஜன், கிருஷ்ணன், சவுந்தரராஜன், பாபு, சரவணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இரவு அனந்த சயன அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. பூஜை ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ராதா செய்திருந்தார்.