பரமக்குடி: பரமக்குடி குமாரசுப்ரமண்ய சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ளகுமார சுப்ரமண்ய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணி தொடங்கி கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைக்குப் பின், மூலவருக்கு அன்னா பிஷேகம் நடந்தது.பின்னர் 7:45 மணிக்கு உற்ஸவர் தேரில் எழுந்தருளி கோயில் வளாகத்தைசுற்றி வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்துஇழுத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று இரவு 7:00 மணிக்கு இடும்பன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை அன்னாபிஷேக குழுவினருடன், தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.