பதிவு செய்த நாள்
13
ஆக
2018
12:08
திருக்கழுக்குன்றம்: முள்ளிக்கொளத்துாரில், நேற்று முன்தினம் இரவு, திருவிளக்கு பூஜை நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம், முள்ளிக்கொளத்துார் கிராமத்தில் உள்ள பஜனை கோவிலில், கிராம நன்மைக்காக, ஹிந்து முன்னணியினர் சார்பில், நேற்று முன்தினம் இரவு, திருவிளக்கு பூஜை நடந்தது. மாவட்ட துணை தலைவர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் ஆறுமுகம் பங்கேற்று, 108 திருமந்திரம் சொல்ல, சிறுவர்கள் உட்பட, 40 பெண்கள் பங்கேற்று, குங்கும அர்ச்சனை செய்தனர்.