ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில், காந்தள் காசி விஸ்வநாதர் கோவில், மஞ்சகம்பை நாகராஜர் கோவில், மஞ்சூர் மாரியம்மன் கோவில்களில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.அந்தந்த பகுதி மக்கள் காலை முதல் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில், சவுடேஸ்வரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.