விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று (ஆக.,13)காலை நடைபெற்றது. தேரோட்டத்தை எம்எல்ஏ சந்திர பிரபா, கலெக்டர் சிவஞானம் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.