பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் அம்மனுக்கு சாற்றப்பட்டது. பின், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூரவிழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு லலிதாஸஹஸ்ரநாமமும், 9:00 மணிக்கு துர்க்க ேஹாமம், நிகும்பலா யாகமும் நடந்தது. காலை, 11:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கும், பிரத்யங்கிராதேவிக்கும் அபிேஷக ஆராதனையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஆடிப்பூரவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.