காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ஆண்டாள் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2018 02:08
காரைக்கால: காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவி லில் ஆடிமாதத்தை முன்னிட்டு ஆண்டாள் வீதியுலா நடந்தது. காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருநட்சத்திரம் நிகழ்ச்சியை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆண்டாள் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஒப்பிலாமணி யர் கோவிலில் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. கருமாரியம்மன் கோவிலில் மகாலட்சுமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.