சாயல்குடி: மாரியூரில் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பவளநிறவல்லியம்மனுக்கு18வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. 2 ஆயிரம் எண்ணிக்கையிலான வளையல்களால் அலங்கரிக்கப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி, சக்தி ஸ்தோத்திரம், மாங்கல்ய பூஜையில் கலந்து கொண்டனர்.பங்கேற்ற பக்தர்களுக்கு, தாம்பூலம், அன்னதானம் வழங்கப்பட்டது.