புதுச்சேரி: முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லஷ்மி ஹயக்ரீவர் கோவில் 47ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை சந்திரப்பிரபையில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (18ம் தேதி) காலை கிருஷ்ண காய்த்ரி ஹோமம்,மாலை சூர்யபிரபையில் சாமி வீதியுலா, 19ம் தேதி காலை புருஷஸீக்த ஹோமமும் மாலையில் சஷே வாகனத்தில் வீதியுலாவும், 20ம் தேதி ஹயக்ரீவ ஹோமமும், மாலை கருட சேவையும் நடக்கிறது. 21ம் தேதி ராம காயத்ரி ஹோமமும் மாலை ஹனுமந்த சேவையும், 22ம் தேதி காலை ஸ்ரீஸீக்த ஹோமமும் மாலை திருக்கல்யாணம் மற்றும் யானை வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை சுதர்சன ஹோமமும், மாலையில் மங்களகிரி-கோரதம் சூர்ணோத்ஸவமும், 24ம் தேதி மாலை புன்னைமர வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர் உற்சவம் 25ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.