பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது. விழா கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் தேதி முதல் தினமும் அம்மன் பல்லக்கில் வீதியுலா நடந்தது. நேற்று 17ம் தேதி காலை சக்திகரகம் எடுத்து வருதல், மதியம் 2:00 மணிக்கு செடல் உற்சவம், 3:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று 18ம் தேதி மஞ்சள் நீர், மாலை பல்லக்கில் அம்மன் புறப்பாடு, இரவு அவரோகணம், அம்மன் வீதியுலா நடக்கிறது.