கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நாகம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலுார் நாகம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாரதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான செடல் உற்சவம் நேற்று நடந்தது. அதனைத்தொடர்ந்து, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் செடல் அணிந்து கோவிலை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இதேபோன்று, ஆணைக்குப்பம் முத்துமாரியம்ன் கோவில் செடல் உற்சவத்தில், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் செடல் போடப்பட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.