பதிவு செய்த நாள்
18
ஆக
2018
01:08
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அருகிலுள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், முகூர்த்த நாட்களில், 20க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன. அப்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, காலையில், அங்கு வருவோர், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவித்தனர். இதனால், எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், கழிப்பறை கட்ட, இரு மாதங்களுக்கு முன், பூமிபூஜை போடப்பட்டது. ஆனால், இன்னும் பணி தொடங்கவில்லை. ஆவணியில், திருமண சீசன் தொடங்கியுள்ளதால், இங்கு வருவோர், அருகிலுள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த, கோவில் நிர்வாகம் சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் கலைச்செல்வி கூறுகையில், ஒப்பந்ததாரர், மற்ற இடங்களில், வேறு பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால், இங்கு பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, என்றார்.