வேடசந்துார் : வேடசந்துார் அருகே நந்திகோயில்பட்டியில் உள்ள நந்தீஸ்வரர் கோயில் மற்றும் மதவானையம்மன் கோவில்களில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் பூஜைகள் தொடர்ந்து வந்த நிலையில் நேற்று 48 ம் நாள் சிறப்பு பூஜைகள் கொண்டாடப்பட்டது.108 சங்காபிஷேகம், அன்னதானம் நடந்தது. பிறந்த வீட்டு பிள்ளைகள் சார்பில் ரூ.2.50 லட்சத்தில் காரம்பசு கன்றுடன் வாங்கித்தரப்பட்டது. கோயில் குலகுரு ஆலவட்ட சவடமுத்து,, தலைவர் காளியாயி , செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளார் பழனிச்சாமி உள்ளிட்ட பங்கேற்றனர்.
சுவாதி பூஜை: கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், சுவாதி நட்சத்திர பூஜை நடந்தது. மூலவருக்கு, திரவிய அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துளசி சாற்றுதலுடன், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.