ஒரு முறை சுகபிரம்மர் “லட்சுமி தாயே! மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தால் உன் அருளைப் பெற முடியும்?” எனக் கேட்டார். “பிறருக்கு பகிர்ந்து கொடுத்தல், பணிவுடன் நடத்தல், பெண்களை மதித்தல், நல்லவர் உபதேசம் கேட்டல், மனம், மொழி, மெய்களால் தூய்மை காத்தல் ஆகிய பண்புகள் கொண்ட நல்லவர்களிடம் நிரந்தரமாக குடியிருப்பேன்” என்றாள். நல்லவன் வாழ்வான் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டுமோ!