பழநி மாரியம்மன் கோயிலில் நாளை (ஆக., 23ல்) புதியதேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2018 10:08
பழநி: பழநி மாரியம்மன் கோயில் புதியதேர் நாளை (ஆக., 23ல்) நான்கு ரதவீதியில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
பழநி முருகன் கோயிலைச் சார்ந்த, கிழக்குரதவீதியிலுள்ள மாரியம்மன்கோயில் பலநூறு ஆண்டுகள் பழமையானது. மாசித் திருவிழாவின் போது திருக்கல்யாண தேரோட்டம் இங்குதான் நடைபெறும். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் திரளான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
இக்கோயிலுக்கென தனியாக தேர் இல்லை. எனவே விழாநாட்களில் பெரியநாயகியம்மன் கோயில் தேரையே பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் மாரியம்மன் கோயிலுக்கு தனியாக புதிதாக ஒரு தேர் செய்யும் பணிகள் 2 ஆண்டுகளாக நடந்தது. சமீபத்தில் இப்பணிகள் முடிந்துள்ளது.புதிய தேரின் வெள்ளோட்ட விழாவை முன்னிட்டு இன்று முதல் யாகபூஜைகள் நடக்கிறது. நாளைஆக., 23ல் சிறப்பு பூஜைகளுடன் நான்குரத வீதிகளில் காலை 10:30 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ் செய்கிறார்.