பதிவு செய்த நாள்
22
ஆக
2018
11:08
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்துவது தொடர்பாக ஆர்.டி.ஓ., ஜீவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் சிலை வைப்பது தொடர்பாக கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. விநாயகர் சிலை வைக்க ஒரு மாதத்திற்கு முன் சப்கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., விடம் விண்ணப்பிக்க
வேண்டும். நிலத்துக்கானதடையில்லா சான்று, போலீஸ், தீயணைப்பு துறை, மின்வாரிய த்திடம் சான்று பெற வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலையாக (உயரம்10 அடிக்குள்) இருக்க வேண்டும். பந்தல்களை தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்க வேண்டும்.
பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை, கல்விநிலையம்அருகில் சிலை வைக்க கூடாது. ஒலிபெருக்கியை காலை, மாலை 2 மணி நேரம் மட்டும் பயன்படுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள், மத தலைவர்களின் விளம்பர பேனர்கள் வைக்க கூடாது.
சிலைகளை 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். அனுமதி வழங்கிய பாதையில், மதியம் 12 மணிக்குள் சென்றுகரைக்க வேண்டும். சிலை உள்ள இடம், ஊர்வலப் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாது. சிலை கரைக்கும் முன்பு மாலை, துணிகள், அலங்கார பொருட்களை அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வெளிநடப்பு: சிலை வைக்கபலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிப்பதை தளர்த்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். விதிகளை தளர்த்த முடியாது என அதிகாரிகள் கூறியதை யடுத்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் வெளிநடப்பு செய்தனர்.
அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே சிலை வைக்க அனுமதி வழங்கப்படும், என ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.