பதிவு செய்த நாள்
22
ஆக
2018
12:08
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு, வேதநாராயணபுரம், குபேர செல்வ விநாயகர் கோவில் கும்பா பிஷேகம், நாளை (ஆக்., 23ல்) நடைபெறுகிறது.
செங்கல்பட்டு, வேதநாராயணபுரம், ராகவேந்திரா நகர் விரிவு பகுதியில், குபேர செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, புனரமைப்புப் பணிகள்
நடந்தன.
கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று (ஆக்., 21ல்) காலை, விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. விசேஷ சாந்தி யந்திர பிரதிஷ்டை உள்ளிட்டவை இன்று (ஆக்., 22ல்) நடக்கின்றன.
நாளை (ஆக்., 23ல்) காலை, 10:00 மணிக்கு, கோபுர கும்பாபிஷேகமும், குபேர செல்வ விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை, 5:00 மணிக்கு வீதியுலா; நாளை மறுநாள் (ஆக்., 24ல்) மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா, ஆர்.ராமய்யா மற்றும் ராகவேந்திரா நகர் விரிவாக்க பகுதி மக்கள் செய்கின்றனர்.