பதிவு செய்த நாள்
22
ஆக
2018
01:08
உத்தமபாளையம்:உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஆக். 23ல்) நடக்கிறது. அதையொட்டி நேற்று (ஆக். 21ல்) வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் துவங்கின.
உத்தமபாளையத்தில் 600 ஆண்டுகால பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான யோகநரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. ஓம் நமோ நாராயணா சபையை சேர்ந்தவர்கள், கோயில் திருப் பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டாக நடந்த திருப்பணிகள் முடிந்து நாளை (ஆக்., 23ல்)கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதன்படி நேற்று(ஆக் 21ல்) புனித தீர்த்தங்கள் நகர் வலம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்தானிகர் ரெங்கராஜன் என்ற ரமேஷ் முதல் கால யாகசால பூஜைகளை செய்தார். இன்று இரண்டாம் நாள் காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறும்.
மாலை இயந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், தாயாருக்கு கண் திறப்பு நிகழ்ச் சிகள் நடக்கும். நாளை காலை 9:00 மணி - 10:00 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.
முதல்கால யாகசாலை பூஜைகளில் கம்பம் ராமலிங்கம்பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரா.பாஸ்கர், பிடிஆர்.வியஜராஜன், ஓம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் அய்யப்பபிள்ளை, செயலர் ராயல்ரவி, உபயதாரர்கள் பி.பழனிவேல் ராஜன், ரவி என்ற கார்த்திகேயன், மன்னார் செட்டியார், மொட்டை யாண்டி, முத்துராமன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நமோ நாராயணா பக்த சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.