பதிவு செய்த நாள்
22
ஆக
2018
12:08
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், 28ம் தேதி முதல் மூன்று நாட்கள், பழங்கால கல்வெட்டு வாசிப்பு பயிற்சி நடக்கிறது.
இது குறித்து, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், உமாசங்கர் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும், சுற்றுலா தலங்களிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு புராதன சின்னங்களும், கல்வெட்டுகளும் உள்ளன.
அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை படித்து தெரிந்துக் கொள்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில், வாசிப்புப் பயிற்சி மற்றும் படியெடுத்தல் எனப்படும்,
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை பேப்பரில் பிரின்ட் எடுப்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும், 28 முதல், 30 வரை, தொடர்ந்து மூன்று நாட்கள், காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை, அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில், முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 81899 65485 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.