பெரியகுளம்: பெரியகுளம் தென்கரையில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்திச் சங்கத்தின் ரால் பிட்டு உற்சவ விழா நடந்தது.
மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளான சுந்தரேசப்பெருமாள், மீனாட்சியம்மனுடன் ரிஷப வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, மேளதாளத்துடன், சங்கத்திற்கு அழைத்து வந்தனர். சோமசுந்தரக் கடவுள் வந்தி என்னும் பக்தைக்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சவத்தை அர்ச்சகர்கள் செய்து காண்பித்தனர். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலர் வேல்முருகன், பொருளார் முத்துகிருஷ்ணன் நிர்வாகிகள் செய்தனர்.