படுநெல்லி: முத்துமாரியம்மன் கோவிலில், ஆவணி திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், படுநெல்லி அருந்ததியர்பாளையத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில், கூழ்வார்த்தல் திருவிழா நடைபெறும். நடப்பாண்டு, திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, பொன்னியம்மன் மற்றும் பெரிய பாளையத்தம்மனுக்கு பொங்கலிடப்பட்டது. அதை தொடர்ந்து, 1:30 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் வீதியுலாவும் நடந்தது. படுநெல்லி அருந்ததியர் பாளையத்தை சுற்றியுள்ள பல கிராம மக்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.