பதிவு செய்த நாள்
23
ஆக
2018
11:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்களின் உடைமைகள் பாதுகாக்கும் அறை, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பாரம்பரிய நகரமாக காஞ்சிபுரம் அறிவிக்கப்பட்டு, நகரில் உள்ள முக்கிய கோவிலை சுற்றிலும் வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
சாலை வசதி, நடைபாதை, மின்விளக்கு, பக்தர்கள் உடைமைகள் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றுக்காக, 19.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், வரதராஜர், காமாட்சியம்மன் ஆகிய கோவில்களின் வெளி பகுதிகளில் பணிகள் நடக்கின்றன. ஏகாம்பரநாதர் கோவில் அருகே, பக்தர்களின் உடைமைகள் பாதுகாக்கும் அறை கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இக்கட்டடம், 15.44 லட்சம் ரூபாயில், ‘சிசிடிவி’ கேமரா, ஆர்.ஓ., பிளாண்ட் குடிநீர் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் உதவி மையமும் இங்கு செயல்படவுள்ளது என, நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.