பதிவு செய்த நாள்
23
ஆக
2018
11:08
கோவை: போத்தனுார், பாரதி நகரில் அமைந்துள்ளது, நாகபத்ரகாளியம்மன் கோவில். கும்பாபிஷேக விழா நேற்று காலை, மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. காலை முதல் இரவு வரை, சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட முன்மண்டபம் நேற்று திறக்கப்பட்டது. இன்று அதிகாலை, 4:30க்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 7:15க்கு கலசங்கள் புறப்பாடு, 7:30 முதல், 8:00க்குள் கோபுர விமானம் மற்றும் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 11:00க்கு, அன்னதானம், இரவு, 7:00க்கு நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதேபோல் காட்டூர், மாரியப்பன் வீதியில் அமைந்துள்ள கருப்பராயர், முனியப்பர், தன்னாசியப்பர் மற்றும் கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று காலை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. இன்று காலை, 7:30க்கு, இரண்டாம் கால யாக பூஜை, 10:00க்கு, கலசங்கள் எடுத்து வருதல், 10:15க்கு, கோபுர விமானத்துக்கும், 10:30க்கு, மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 11:00க்கு, மகா அபிஷேகம், மதியம், 12:00க்கு, அன்னதானம் நடக்கிறது.