பதிவு செய்த நாள்
23
ஆக
2018
01:08
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று (ஆக.,23) மதியம் 1:௦5 மணிக்கு புட்டு தோப்பு மண்டபத்தில் நடக்கிறது. சிவனடியார்கள் திருக்கூட்டமைப்பு திருஆலவாய் சார்பில் சிவபூஜை, திருவாசகம் முற்றோதுதல், அன்னதானம் நடக்கிறது. தானப்ப முதலி தெரு கஜனா பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் அதிகாலை 5:00 மணிக்கு சிவபூஜை, காலை 7:00 மணிக்கு அருப்புக்கோட்டை ராமசுப்பு குழுவின் திருவாசகம் முற்றோதுதல், சிவராஜவேலின் பக்தி சொற்பொழிவு, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் அர்ஜூனன், ராஜபாண்டியன், குமரகுரு, சரவணன், சுரஷே்கண்ணன், சிவமணிகண்டன், சிவசதீஷ் செய்துள்ளனர்.