பதிவு செய்த நாள்
23
ஆக
2018
01:08
நகரி : பெரியபாளையத்து பவானியம்மன் கோவிலில் நடந்த ஆண்டு உற்சவ விழாவில், அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்துார் மாவட்டம், நகரி நகராட்சி, சிந்தலப்பட்டடை கிராமத்தில், பெரியபாளையம், பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி, நேற்றுமுன்தினம், ஆண்டு உற்சவ விழா நடந்தது. காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கிராம வீதிகளில் வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.