பழநி: கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்வேண்டி பழநி முருகனுக்கு 108 பால்குடங்கள் அபிஷேகம் செய்து சிவசேனா அமைப்பினர் வழிப்பட்டனர். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முரளி தலைமை வகித்தார். மாநில செயலாளர் அசோக்பாபு, மாவட்ட தலைவர் கனிவளவன் முன்னிலை வகித்தனர். கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மக்கள் மீண்டு வர வேண்டி, பாதவிநாயகர் கோயிலில் இருந்து படிப்பாதைவழியாக 108 பால்குடங்கள் எடுத்து மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு சாயராட்சை பூஜைக்குபின் முருகனுக்கு பால்அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது. சிவசேனா மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.