வடமதுரை: பாடியூரில் பெரியநாயகியம்மன், பதினெட்டாம்பட்டி சந்தன கருப்பணசுவாமி, முன்னடியான் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை அக்கம்மாள் கோயிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்தக்கவசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, முதல் கால யாக பூஜைகள் துவங்கின. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தாடிகொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் குருவாயூரப்பன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பக்தர்கள் பங்கேற்றனர்.