பதிவு செய்த நாள்
24
ஆக
2018
01:08
கோவை;ராமநாதபுரம் பஜனைக் கோவில் வீதியில் உள்ள கற்பகப்பிள்ளையார், வேல்முருகப் பெருமாள், கோதண்ட ராமர் கோவில்களில், கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூலை, 21ம் தேதி முளைப்பாலிகை வழிபாடு மற்றும் முதலாம் கால வேள்வி பூஜை நடந்தது. 22ம் தேதி, விமான கலசங்கள் நிறுவுதல், இரண்டாம் கால வேள்வி பூஜை, மூன்றாம் கால வேள்வி பூஜை, மூல மூர்த்திகளை ஆதார பீடத்தில் வைத்து எண்வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று, காலை 5:00 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜையும்,பேரொளி வழிபாடு, மலர் வழிபாடு, ராகம், தாளம் வாசத்தில், திருமுறை இசைத்தல், வேண்டுதல் விண்ணப்பம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு, திருக்குடங்கள் கோவிலை வலம் வந்த பின்னர், காலை, 7:45 மணிக்கு, விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. காலை, 8:00 மணிக்கு, மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.