பேரூர்: பூலுவப்பட்டி முட்டத்துராயர் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது.கோவை, பூலுவப்பட்டியில் உள்ள விநாயகர் மற்றும் முட்டத்துராயர் கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து, திருவிளக்கு மற்றும் புனித நீர் வழிபாடுகள் நடந்தன; மங்கள இசையுடன் இறைத்திருமேனிகள் பீடத்தில் எண்வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது. நேற்று காலை, 5:30 மணிக்கு சக்திகளை திருமேனிகளுக்கு எழுந்தருளச் செய்தல் நடைபெற்றது. தொடர்ந்து, 8:00 மணியளவில், திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து, விநாயகர் மற்றும் முட்டத்துராயர் கோவிலின் கோபுரங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது; வந்திருந்த பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.