திருவாடானை: திருவாடானை அருகே வேலாவயல் கிராமத்தில் உள்ள மதுரைவீரன், அஞ்சுகோட்டை காத்தாயிஅம்மன், செங்கமடை விக்னேஸ்வரர் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.