பதிவு செய்த நாள்
24
ஆக
2018
01:08
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பிடமனேரி மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, 20ல், கணபதி ?ஹாமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை, மாலை இருவேளையும் யாகபூஜை நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, கோவிலில் உள்ள, மாரியம்மன், விநாயகர், துர்கையம்மன் கோபுரத்துக்கு, கலச நீர் ஊற்றப்பட்டு, கும்பாபி?ஷகம் நடந்தது. நாளை மறுநாள் இரவு, 7:00 மணிக்கு, 108 குத்து விளக்கு பூஜை நடக்கிறது. 27ல், அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், 28ல், கூழ் ஊற்றுதல் நடக்கிறது. 29ல், தீச்சட்டி, மாவிளக்கு ஊர்வலம், 30ல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.