பதிவு செய்த நாள்
24
ஆக
2018
03:08
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ரெகுநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம், ஆக., 22 ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மேல் நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்கப்பட்டது. ஆக., 23 ல் காலை 6:00 மணிக்கு அனுக்ஞை,விக்னஷே்வர பூஜை, இரவு 9:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை வேதபராயணம், கோபூஜை,சூரிய நமஸ்காரம், நாடி்சந்தானம், பூர்ணாஹீதி யாத்ரா தானம், காலை 9:30 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ஆசீர்வாதம், பிரசாதம் வழங்கப்பட்டது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செங்குந்த முதலியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.