பதிவு செய்த நாள்
25
ஆக
2018
12:08
செங்கல்பட்டு: புதுப்பாக்கம் கிராமத்தில், வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகா, புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள, வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், ஆவணி மாதம் ஆடித் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டின் திருவிழா, 21ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.நேற்று காலை, 9:00 மணிக்கு, அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு, ஊரணி பொங்கல் வைத்து, வேப்பஞ்சேலை அணிவித்து, தீ சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று காலை, 9:00 மணிக்கு, வேண்டவராசி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, வேண்டவராசி அம்மன் வீதியுலா, சிறப்பு அபிஷேகம், கூழ் ஊற்றுதல், அன்னதானம் மற்றும் இரவு, 7:00 மணிக்கு, அம்மன் தேர் பவனி நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்துள்ளனர்.