பழநி: பழநி திருஆவினன்குடிகோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, 108 சங்குகள் வைத்து யாகபூஜை நடந்தது. முருகப்பெருமானின் மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பியும், கணபதிபூஜை, சுப்ரமண்யா பூஜையுடன் யாகபூஜைவழிபாடு நடந்தது. அதன்பின் உச்சிகாலபூஜையில் குழந்தை வேலாயுதசாமிக்கு சங்காபிஷேகம், பால், பழங்கள் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது. உபயதாரர் ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். பெரியநாயகியம்மன்கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு மாலையில் நடராஜருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.