பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
கிருஷ்ணகிரி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோவிலில், நேற்று மாலை சுமங்கலி பூஜை, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமிக்கு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த, 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுமங்கலி பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை டவுன் எஸ்.ஐ., அமுதா செய்திருந்தார். பயிற்சி டி.எஸ்.பி., கோகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.
* தர்மபுரி மாவட்டம், அரூர், பழையபேட்டை மகா சக்தி மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி நோன்பையொட்டி, நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. இதில், பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு தாலிக்கயிறு, குங்குமம், மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி முருகேசன் செய்திருந்தார்.