ஆவுடைபொய்கை ஜெய வீர ஹனுமன் கோயில் மகா ஸம்ப்ரோக்ஷன விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2018 03:08
காரைக்குடி: காரைக்குடி ஆவுடைபொய்கை ஜெய வீர ஹனுமன் கோயில் மகா ஸம்ப்ரோக்ஷன விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூபம், திருவாதாரணம், ேஹாமம் நடந்தது. 9:15 மணிக்கு கும்பங்கள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 9:45 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் விமானம் சன்னதி மகாஹம்ப்ரோக்ஷனம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம், பெரிய கருப்பன் எம்.எல்.ஏ., பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், நிர்வாகிகள் அய்யப்பன், ராமசுப்பிரமணியன், ரவி சர்மா, கேந்திரிய வித்யாலயா சென்னை மண்டல உதவி ஆணையர் ராஜேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர்.