பதிவு செய்த நாள்
27
ஆக
2018
11:08
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா, நேற்று நடைபெற்றது.செங்கல்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவில், மேல்மருவத்துார் ஆதி பராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், செங்கல்பட்டு ஆதிபராசக்தி மண்டல வழிபாட்டு மன்றங்கள் சார்பில், ஆடிப்பூர பெருவிழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து, பெரியநத்தம், சேப்பாட்டி அம்மன் கோவிலிருந்து, கஞ்சி கலய மற்றும் பால்குட ஊர்வலம் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவில் அருகில் நிறைவடைந்தது. அதன் பின், கஞ்சியை சுவாமிக்கு வைத்து படைத்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.