பதிவு செய்த நாள்
27
ஆக
2018
11:08
செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகா, புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், ஆவணி மாதம் ஆடித் திருவிழா நடைபெறுகிறது.இந்த ஆண்டின் திருவிழா, 21ம் தேதி துவங்கி, தினமும், சுவாமி அலங்காரத்தில் விதியுலா நடைபெற்றது. நேற்று, காலை, 6:00 மணிக்கு, வேண்டவராசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ் ஊற்றுதல், அன்னதானம் மற்றும் இரவு, அம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.அதன் பின், முக்கிய தெருக்கள் வழியாக தேர் வீதியுலா சென்று, கோவிலை வந்தடைந்தது.