அலங்காநல்லுார்: பாலமேடு அருகே சத்திர வெள்ளாளபட்டி சிவனடி ஐயன்சுவாமி, பேச்சியம்மன், விநாயகர், பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹாேமத்துடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. பின் புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 21 பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.