பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 46ம் ஆண்டு திருவிழா, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, 46வது ஆண்டு திருவிழா, 29ம் தேதி மாலை, 5:45 மணிக்கு, பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையடுத்து, இறை அழைத்தல் விழா, இளையோர் விழா, பக்த சபைகள்விழா, நற்கருணை விழா, உழைப்பாளர் விழா, நலம்பெறும் விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா என, செப்., 6ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில் விழா நடத்தப்படுகிறது. செப்., 7ம் தேதி ஆலயத்தின் பிரதான விழாவான, தேர் திருவிழா நடக்கிறது. செப்., 8ம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா, அன்னைக்கு முடிசூட்டு விழாவுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. - நமது நிருபர்-