பரமக்குடி: சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக நீர் நிலைகளுக்கு பாதிப்பில்லாத பேப்பர்விநாயகர் சிலைகளை பரமக்குடி கைத்தறி நெசவாளர் தயாரித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்நகரைச் சேர்ந்த பட்டு கைத்தறி நெசவாளர் பாஸ்கரன்,55. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரை சதுர்த்தி விழாவில் தரிசனம் செய்யும் நோக்கில் பல்வேறு அமைப்பின ருக்கு களிமண்ணால் ஆன சிலைகளை செய்து கொடுத்தார். அவை காய் வதற்கு வெகு நாட்கள் ஆனதுடன், எடை அதிகம் கொண்டதாக இருந்ததால் துாக்கிச்செல்வதில் சிரமம் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு பேப்பர்கள், மூங்கில் குச்சிகள், கிழங்குமாவு பசை, நுால் கயிறு, வண்ண பேப்பர் கொண்டு சிலைகளை செய்து வருகிறார். 2 அடி முதல் 15 அடி வரை எந்த சிலையாக இருப்பினும் ஒருவரே இலகுவாக துாக்கிச் செல்ல முடிகிறது.