அப்போஸ்தலர் பவுல் என்பவர் சிறந்த தத்துவ ஞானி. பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் வரிசையில் அவரைச் சேர்க்கலாம். அவர் எப்போதும் கிறிஸ்துவின் அருளை பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் வாழ்ந்தவர். அவர் துன்பம் வரும் போதெல்லாம் மொத்த நேரத்தையும் கிறிஸ்துவை அறிவதற்காகவே செலவிட்டார். தன் வாழ்வின் குறிக்கோள் கிறிஸ்துவை நேசிப்பதும், அவரது திருவடியை அடைவதுமே என அறிவித்தார். பவுலைப் போல கடவுளை நேசித்து அன்பு செலுத்துவோம்.