பதிவு செய்த நாள்
29
ஆக
2018
11:08
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில், மிகவும் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. புதிதாக மூன்று நிலை கோ புரம், முன் மண்டபம் புதிதாக அமைத்து, திருப்பணிகள் செய்யப்பட்டன. கோவில் கும்பாபிஷேகவிழா, 27ல் பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கணபதி வேள்வி, புண்ணிய நதிகளின் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலையில், முளைப்பாலிகை ஊர்வலம், தொடர்ந்து முதல்கால வேள்வி நடந்தது.
மூலத்துறை ஜெயப்பிரகாஷ், மேட்டுப்பாளையம் ஜோதிவேலவன் ஆகியோர் வேள்வி வழிபாடுகளை செய்து வருகின்றனர். இன்று காலை, இரண்டாம் கால
வேள்வி, மாலையில் எண்வகை மருந்து சாத்துதல், விமானம் கலசம் நிறுவுதல், மூன்றாம் கால வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை (30) நான்காம் வேள்வி, காலை, 7:45ல் இருந்து, 8:15க்குள் பரிவார சுவாமிகளுக்கு குடமுழுக்கு நடக்கிறது. 9:10க்கு கோவில் விமானம் மற்றும் மாரியம்மனுக்கு கும்பாபிஷகம் நடக்கிறது.