பதிவு செய்த நாள்
29
ஆக
2018
12:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராகவேந்திரர் கோவிலில், ஆராதனை மஹோத்ஸவ விழா நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோவிலில், 347வது ஆராதனை மஹோத்ஸவ விழா, கடந்த, 27ல் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையும், சிறப்பு ஹோமங்கள் நடந்தன. 10:30 மணிக்கு, இசைக் கச்சேரியும், மாலை பஜனையும் நடந்தது. நேற்று மாலை, 7:30 மணிக்கு, ராகவேந்திரர் சுவாமிகளின் திருவுருவப்படம் திருவீதி உலாவும் நடந்தது. இதையொட்டி, சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, 10:30 மணிக்கு, ஓசூர் மாதவி லதாவின் கர்நாடக இன்னிசை கச்சேரியும், மாலை பஜனையும் நடக்க உள்ளது.