பதிவு செய்த நாள்
29
ஆக
2018
12:08
ஈரோடு: ராகவேந்திரர் ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகளின், 347வது ஆராதனை விழா, பல்வேறு இடங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள, பாதராஜ மடத்தில் உள்ள, ராகவேந்திரர் அதிஷ்டானத்தில், நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில், பாதராஜ பஜனா மண்டலியரின் தேவ ராம நாம பஜனை நடந்தது. காவிரிக்கரை ராகவேந்திரர் ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தில், அவரது பிருந்தாவனத்தில், பல்லக்கு ரத உற்சவம், பால் பஞ்சாமிருத அபிஷேகம், அலங்காரம், உபன்யாசம், மகா தீபாராதனை, மங்கள ஆரத்தி நடந்தது. இதில் ஈரோடு மாநகரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராகவேந்தர் அதிஷ்டானம், பிருந்தாவனத்தை தரிசனம் செய்து வணங்கினர்.